தம்மிக்க பண்டாரவின் கொரோனா மருத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேகாலையில் தம்மிக்க பண்டார என்பரினால் தயாரிக்கப்பட்ட மருந்தை, கொரோனா தொற்றாளர்களுக்கு வழங்குவதற்கு ஆயுர்வேத திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 இதன்படி, கொரோனா தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கு மேலதிகமாகவே, அதனை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ப்ரசாத் ஹெந்தவிதாரண தெரிவித்துள்ளார். 

குறித்த மருந்து தொடர்பில் ஆராய, ஆயுர்வேத திணைக்களத்தின் விசேட நிபுணர்கள் குழுவொன்று, தம்மிக்க பண்டாரவின் வீட்டுக்கு நேற்றைய தினம் விஜயம் செய்துள்ளனர். 

 இந்த நிலையிலேயே, குறித்த மருந்தை கொரோனா தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கு மேலதிகமாக வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 கொரோனா தொற்றை தடுப்பதற்காக, கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார என்ற நபரினால் தயாரிக்கப்பட்ட குறித்த மருந்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பொது மக்களுக்காக வழங்கப்பட்டது.

 எனினும், குறித்த மருந்துக்கு, சுகாதார அமைச்சினால் உரிய அனுமதி வழங்கப்படாத காரணத்தினால், மருந்து விநியோக நடவடிக்கையை இடைநிறுத்துமாறு, சுகாதார தரப்பினரால் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: