அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் தீவிரமாக செயற்படும் அங்கஜன் இராமநாதன் !


“என் கனவு யாழ்”  என்ற வாசகத்திற்கு விதி விலக்காக அமைந்த இளம் ஆளுமையே யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுகளின் பிரதி தலைவருமான அங்கஜன் இராமநாதன் .

இவரால் யாழ் மாவட்டம் கடந்த காலங்களில் பல அபிவிருத்திகளை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது தற்போது வெள்ள அனர்த்தம் மற்றும் கொவிட் தொற்று சூறாவளி அனர்த்தங்களிலும் மக்களுடன் மக்களாக நின்று சேவை புரிந்தவர்.

மேலும் தமிழ் அரசியல் கைதிகள் விடையங்களில் அதிக கவனம் செலுத்தும் அங்கஜன் அரசியல் கைதிகளின் விடயத்தில் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என  தெரிவித்துள்ளார். 

ஆளும் தரப்பிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் நாளை நீதியமைச்சர் அலி சப்ரியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: