884 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த  884 இலங்கையர்கள் இன்று (12) காலை நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களில் வெளிநாடுகளில் பணி புாிவதற்காகச் சென்று நாடு திரும்ப முடியாத நிலையில் 570 பேர் இருந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தொிவிக்கின்றார்.

இவர்கள் ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளிலிருந்து இங்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 495 பேர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இவர்கள் தொழில், வியாபாரம் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக அவுஸ்திரேலியா, ஜப்பான், கட்டார், டுபாய் மற்றும் அபுதாபி போன்ற நாடுகளுக்கு பயணமாகியிருப்பதாக எமது செய்தியாளர் தொிவிக்கின்றார்

No comments: