847 கிலோகிராம் மஞ்சளுடன் இருவர் கைது


தீர்வை வரி செலுத்தாது நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மேலும் 847 கிலோகிராம் மஞ்சளுடன் சந்தேக நபர்கள் இருவர்  நேற்று பிற்பகல் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவர் சிலாபம் - பங்கதெனிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் வசமிருந்த 200 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,மன்னார்- சிலாவத்துறை துறை அரிப்பு  கடற் பிரதேசத்தில் மேலும் 647 கிலோகிராம் மஞ்சளுடன் நபரொருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: