வீரவில சிறைச்சாலையின் 74 கைதிகளுக்கு கொவிட்-19 தொற்று

வீரவில சிறைச்சாலையின் 74 கைதிகளுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

ஏனைய சிறைச்சாலைகளில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக வீரவில சிறைச்சாலைக்கு அனுப்பபட்டவர்களுக்கே கொவிட்-19 தொற்றுறுதியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த சிறைச்சாலை கைதிகளுடன் தொடர்புடையவர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சிறைச்சாலைகளில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2200 ஆக அதிகரித்துள்ளது.

No comments: