கிழக்கில் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் சம்மந்தப்பட்ட 481 பேருக்கு தொற்று !

கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் சம்மந்தப்பட்ட 481 பேருக்கு நேற்று மாலை வரையில் மொத்தமாக தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார். 

நேற்றையதினம் அங்கு 4 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டது.

இதன்படி கல்முனையில் 3 பேருக்கும் உகனயில் ஒருவருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதேநேரம், நேற்று இரவு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் மற்றும் யாழ்ப்பாண மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 380 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் கொவிட்19 நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் ஒருவரின் பிள்ளைகள் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று பரிசோதனை செய்யப்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தமது பேஸ்புக் தளத்தில் இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

No comments: