அக்கரைப்பற்றில் 42 மேலதிக தொற்றாளர்களால் உயர்ந்த எண்ணிக்கை


கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் உள்ள அக்கரைப்பற்று பிராந்தியத்தில் நேற்றையதினம் 42 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை வெளியிட்டுள்ள நாளாந்த நிலமை அறிக்கை தெரிவிக்கின்றது.

அதனடிப்படையில் இதுவரையில் அக்கரைப்பற்று பிராந்தியத்தில் அன்ரிஜன் மற்றும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் உள்ளடங்கலான  2707 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் நேற்றையதினம் 42 தொற்றாளர்கள் அக்கரைப்பற்றில் இனங்காணப்பட்டுள்ளனர் இதனைத் தொடர்ந்து மொத்தமாக 184 தொற்றாளர்கள் குறித்த பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.

3 நபர்கள் சிகிச்சை முடித்து வெளியேறியுள்ள நிலையில் தற்போது 181 பேர் தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

No comments: