39 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 14 பேர் கைது


நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 39 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் 14 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரும் காவற்துறையினரும் ஒன்றிணைந்தே இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,இதன்போது ஒரு மோட்டார் வாகனம்,இரு உந்துருளிகளுடன் 39 கிலோகிராம் 197 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24-26 வயதிற்கு உட்பட்டவர்களென தெரிவிக்கப்புடுகின்றது.

No comments: