அம்பாறை மாவட்டத்தில் 38,559 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் கடந்த 26ம் திகதி முதல் மறு அறிவித்தல்வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மேற் குறித்த 03 பகுதிகள் மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த 14,735 குடும்பங்களும் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 15,413 குடும்பங்களும் ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 8,411 குடும்பங்களுமாக மாவட்டத்தில் 03 பிரதேச செயலாளர் பிரிவுகளைச்சேர்ந்த 38,559 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்குட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற் குறித்த பிரதேச மக்களுக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் பிரதேச செயலகத்தினால் அனுமதியளிக்கப்பட்ட வியாபாரிகளுடாக மக்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது.

கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளின் மேற்பார்வையின் கீழ்  கல்முனை பிராந்திய சுகாதார பனிமனையின் ஆலேசனைக்கு அமைய  தினமும் மேற் குறித்த மூன்று பிரதேசங்களிலும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு முடிவுகளின் அடிப்படையில் பிரதேசங்களுக்காக சுகாதார பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகின்றது. No comments: