தேசிய மட்ட பரீட்சைகள் உள்ளிட்ட 35 பரீட்சைகளை நடத்த தீர்மானம்


தேசிய மட்ட பரீட்சைகள் உள்ளிட்ட 35 பரீட்சைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா பிரச்சினைக்கு மத்தியில் குறித்த பரீட்சைகளை நடத்துவதற்கான உறுதிப்படுத்தப்பட்ட திகதிகளை அறிவிக்க முடியாத நிலை காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாடு வழமைக்கு திரும்பிய பின்னர் பரீட்சைகளை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக, ஆட்சேர்ப்பு போட்டி பரீட்சைகள், திறன் போட்டி பரீட்சைகள் மற்றும் பிரிவெனாக்களின் இறுதி பரீட்சைகள் உள்ளிட்ட 35 பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகளை ஜனவரி மாதம் முதல் மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: