கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வலயத்தில் இதுவரை 32 தொற்றாளர்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்.

  


கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் ஊடாக கல்முனை பிரதந்தியத்தின் இன்றைய கொவிட் நாளாந்த அறிக்கை தினமும் வெளியிடப்படுகின்றது .

அந்தவகையில்  கல்முனை சுகாதார பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இன்று (10) காலை 10.00 மணியளவில் வெளியிடப்பட்ட நாளாந்த நிலமை அறிக்கை தொடர்பான விபரங்கள் கிழே குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் அம்பாறை மாட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்றுவரை 235 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 10 பேர் சிகிச்சை நிறைவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்   37 தொற்றாளர்களும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 தொற்றாளர்களும்இதுவரையில்  இனங்காணப்பட்டுள்ளதுடன் தொற்றாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கல்முனை சுகாதார பணிப்பாளர் பணிமனையின் கீழ் இதுவரையில் 346 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 312 பேர் தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சை பெற்றுவருவதுடன் 32 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாக  குறித்த அறிக்கை தெரிவிக்கின்றது. 

மேலும் நேற்றைதினம் அட்டாளைச்சேனையில் 2 தொற்றாளர்களும் ஆலைடியவேம்பில்3வரும் அக்கரைப்பற்றில் 08 பேரும் சம்மாந்துறை மற்றும் பொத்தவில் பிரதேசங்களில் தல ஒருவர் வீதம் மொத்தம் 15 புதிய தொற்றாளர்கள்   இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தலை நிறைவு  செய்தவர்கள் விபரம் 

பொத்துவில்   07

அக்கரைப்பற்று 10

திருக்கோவில்  01 

கல்முனை தெற்கு 05

சாய்ந்த மருது  02

காரைதீவு 01

இறக்காமம் 06  

No comments: