கடந்த 24 மணி நேரங்களில் 33 பேர் கைது

முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் முதலான தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டம் அமுலாக்கப்பட்ட கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் தற்போது வரையான காலப்பகுதி வரையில்இ அந்த சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் ஆயிரத்து 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments: