ரெபிட் என்டிஜன் பரிசோதனை; இதுவரை 23 பேர் தொற்றாளர்களாக அடையாளம்


மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பயணிகள் தொடர்பில் 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் ரெபிட் என்டிஜன் சோதனை  நடவடிக்கையில் இதுவரை 23 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சோதனை நடவடிக்கையின் போது பெந்தோட்ட பகுதியில்    பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் குறித்த மாணவரின் தந்தை களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் நிலையில் குறித்த பொலிஸ் நிலையத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பயணிகள் தொடர்பில் 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் ரெபிட் என்டிஜன் சோதனை நடவடிக்கை தொடர்ந்தும்  முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: