அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மக்களின் செயற்பாட்டால் 2 மதாங்கள் வரை தனிமைப்படுத்தல் தொடரலாம் . -கு.சுகுணன்


கல்முனைப் பிராந்தியத்தின் கொவிட் 19 நிலைமை தொடர்பில் தேசிய பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் இவ்வாறு தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புடைய COVID - 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது இந் நிலைமை அவ்வாளவு ஆரோக்கியமானதல்ல எனவும் 

 மேலும் குறித்த பிரதேச மக்களுக்கு கொரோனா சம்பந்தமான தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இருப்பினும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பிரதேசங்களின் உள்வீதிகளில் சிலர் தொடர்ந்தும் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டே வருகிறார்கள்.

 அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தனிமைப்படுத்தல் பகுதிகளை விரைவாக நாம் விடுவிக்க செயற்பட்டாலும் ஒருசிலரின் செயற்பாடுகள் திருப்தியளிக்கவில்லை.

இவ்வாறான நிலைமை தொடரும் பட்சத்தில் குறித்த பகுதிகளை 2 வாரங்கள் அல்ல 2 மாதங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்த வேண்டிவரும். என குறிப்பிட்டார் 

No comments: