நாட்டில் நேற்றைய தினத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு


நாட்டில் கொரோனா தொற்று நோயாளிகளை அடையாளம் காண இதுவரை 1.2 மில்லியனிக்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் மாத்திரம் 12 ஆயிரத்து 222 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 18ம் திகதியில் இருந்து இதுவரை நாட்டில் 12 இலட்சத்து 4 ஆயிரத்து 350 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் டிசம்பர் மாதம் 11ம் திகதிலேயே அதிக எண்ணிக்கையிலான அதாவது 17 ஆயிரத்து 425 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: