நாட்டில் தொடரும் கைது ! தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1172 பேர் சிக்கினர்.

 நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக  அறிவிக்கப்படுகின்றது.  இதன் போது பல இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் நாட்டில் மொத்தமாக முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 45 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1172 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments: