இறக்காமத்தில் மேலும் இருவருக்கு கொரோனா - கல்முனை RDHS பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் 20ஆக உயர்வு

ஏ.எல்.எம்.ஷினாஸ்      


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளன  என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். 

இறக்காமம் பிரதேசத்தில் (05) மேற்கொள்ளப்பட்ட பரிசேதைனைகள் மூலம் மேலும் இருவருக்கு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து கல்முனை சுகாதார சேவைகள் பிரிவில் கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வடைந்துள்ளது. 

இதுவரை கல்முனை RDHS பிரிவில் கொரானா தொற்றானவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பொத்துவில் - 7 , கல்முனை -3, மருதமுனை -2,  சாய்ந்தமருது - 1, அக்கரைப்பற்று -1, இறக்காமம்-6 பேர் என 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

இதேவேளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குற்பட்ட   கல்முனை தெற்கு, கல்முனை வடக்கு, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், சம்மாந்துறை, இறக்காமம் மற்றும் நாவிதன்வெளி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில்  கொரானா  தொற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய  567 குடும்பங்களைசேர்ந்த 1819 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் 545 நபர்களுக்கு  PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

No comments: