பேருந்து கட்டணங்கள் தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கை


பஸ் கட்டணங்களை 20 ரூபாவாக அதிகரிப்பதற்காற்கான யோசனையை முன்வைத்துள்ளதாக தனியார்  பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுகாதார அமைச்சின் வர்த்தமானியின் பிரகாரம் இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக 12 ரூபா  கட்டணம் 18 ரூபாவாக அறவிடப்படும் என்பதுடன் அதனை 20   ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சிடம் யோசனை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பேருந்து கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் எதுவித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: