தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகம் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றம்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


பொகவந்தலாவ மோரா கீழ் பிரிவு தோட்டப்பகுதியில் அமைந்துள்ள தேசிய 
பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தினை தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகின்ற இந்த சூழ்நிலையில் குறித்த முகாமைத்துவம் நிறுவகம் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த முகாமைத்துவ நிறுவகம் தனிமைப்படுத்தல் நிலையமாக செயற்படுகின்ற போது குறித்த நிலையத்தில் நீர் பிரச்சினை 
காணப்படுகிறது. 

குறித்த நிலையத்திற்கு பொகவந்தலாவ ரொப்கில் தோட்ட வனப்பகுதியில் இருந்து நீர் பெறப்படுகிறதோடு, வரட்சியான காலப்பகுதியில் நீர்தட்டுப்பாடு ஏற்படும். 

ஆகவே இது போன்ற பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு குறித்த நிறுவகத்தினை தனிமைபடுத்தல் நிலையமாக மாற்ற அரசாங்கப் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

No comments: