கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற அலுவலகத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்


கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

தபால் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பணியாளர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொழும்பு  மத்திய தபால் பரிமாற்ற அலுவலகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஊரடங்கு நீக்கப்படுவதையடுத்து கொழும்பு மத்திய பரிமாற்ற அலுவலகத்தை தொற்று நீக்கம் செய்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச விரைவு தபால் சேவை, வர்த்தக தபால் சேவை மற்றும் உள்நாட்டு விரைவு கொரியர் சேவை ஆகியவற்றை மீள ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாளையதினம் முதல் தபால் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: