பெண் ஒருவரின் தங்கமாலையை அறுத்து விட்டு தப்பியோடிய சந்தேக நபர் கைது

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


ஹட்டன் நகருக்கு வருகை தந்த பெண் ஒருவர் ஹட்டன் மென்டிஸ் மாவத்த ஊடாக சென்று கொண்டிருந்த வேலை குறித்த பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்து தப்பி ஒடிய சந்தேக நபர் ஒருவரை 05.11.2020.வியாழக்கிழமை ஹட்டன் பொலஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த பெண் கடந்த இரண்டாம் திகதி ஹட்டன் நகருக்கு வந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளையில் பெண்ணின் மாலையை அறுத்து தப்பி ஒடியமை தொடர்பில் குறித்த பெண் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துவிட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார். 

அதனை தொடர்ந்து இன்றைய தினம் ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமை விசாரனைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஸ்கெலியா காட்மோர் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


No comments: