அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை


கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளும் நோக்கில், பணப்பரிமாற்றம் செய்வதை குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்தக் கோரிக்கைகயை முன்வைத்துள்ளது.

இதன்படி, புதிய தொழில்நுட்ப கொடுப்பனவு முறையில் ஈடுப்படுதல் அல்லது பணபரிமாற்றத்தை மேற்கொண்ட பின்னர் கை கழுவுவதன் மூலம் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பணம் மாத்திரம் இன்றி பொருட்களை பரிமாறும் போதும் சுகாதார பாதுகாப்பு முறையை கடைப்பிடிப்பது அவசியமாகும் என வைத்தியர் சமந்த ஆனந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: