கடும் மழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம்

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்                                                                                            

பெருந்தோட்டப் பகுதிகளில், நேற்று (5)மாலை பெய்த கடும் மழை காரணமாக, சில பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.  

அந்தவகையில். நாவலப்பிட்டி நகரம் பகுதி அளவில் வெள்ள நீரினால் முழ்கியுள்ளது. 

நேற்று மாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக நாவலப்பிட்டி நகரில் உள்ள கால்வாய்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததன் காரணமாக நாவலபிட்டி கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து சிலமணி நேரம் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments: