சுயதனிமைக்குட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 40 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள்  வழங்கப்பட்டது.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு  இராஜாங்க அமைச்சருமாகிய ஜீவன் தொண்டமானின் நிதியொதுக்கீட்டில்  மேற்படி குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள்  01/11 வழங்கப்பட்டது 

இதன் போது ஹட்டன் டிக்கோயா நகரசபை தலைவர் சடையன் பாலச்சந்திரன், உறுப்பினர்கள்,ஹட்டன் பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களும் கலந்துகொண்டனர். No comments: