கிருமிநாசினி தெளிக்கச் சென்றவர்கள் ஹட்டன் மீன் கடையில் கைவரிசை

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ் 


கிருமி நாசினி தெளிக்கச் சென்ற ஊழியர்கள் ஹட்டன் மீன் விற்பனை நிலையத்திலிருந்த ஒருத்தொகை பணத்தை திருடிச்சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் நகர மத்தியிலுள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு 6.11.2020 அன்று ஹட்டன் நகரசபை உழியர்களினால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.  

இதன்போது, மீன் விற்பனை நிலையத்திலிருந்த பணப்பெட்டியிலிருந்த பணத்தை திருடிச்செல்வது சி.சி.டிவி கமராவில் பதிவாகியுள்ளது. 

37 ஆயிரம் ரூபா பணத்தொகையே இவ்வாறு திருடப்பட்டள்ளதாகத் தெரியவருகின்றது.  

குறித்த மீன் விற்பனை நிலைய உரிமையாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந் நிலையில், குறித்த மீன் விற்பனை நிலையத்திலிருந்து மீன்களை கடும் சுகாதார முறைமையோடு ஹட்டன் - டிக்கோயா நகரசபையினால் அகற்றி அழிக்கப்பட்டது. 

இந் நிலையில், நேற்று (06/11)  மாலை நகரசபை ஊழியர்களினால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இதன் போதே பணத் தொகை உட்பட மேலும் சில  பொருட்கள் அங்கிருந்து திருடப்பட்டள்ளது கமராவில் பதிவாகியுள்ளது .

சம்பவம் தொடர்பில் குறித்த மீன் விற்பனை முகாமையாளரினால் ஹட்டன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


No comments: