இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மாணவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்


பாடசாலைகள் ஆரம்பிப்பது தாமதமாவதால் நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு கற்றல் நடவடிக்கைகளை வீட்டிலிருந்து மேற்கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் வெளி பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கல்வித் திணைக்களமும்,பாடசாலைகளும் வழிப்படுத்தும் இணையவழியிலும்,தொலைக்காட்சி ஊடாகவும் நடைபெறும் கற்றல் செயற்பாடுகளில் இணைந்திருங்கள்.

இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சைக்கு ஆயத்தமாக வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


No comments: