நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்


நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக 239 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி நாட்டில் இதுவரையில் 10663 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7185 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 1041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 6144 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் 4399 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 6244 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: