சமூக இடைவெளி தொடர்பிலான விசேட கலந்துரையாடல்


தற்போது பேணப்படும் சமூக இடைவெளியின் அளவு குறித்து இன்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேணுமாறு சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், குறித்த சமூக இடைவெளி போதுமானதல்ல என பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதனை அடுத்து இது தொடர்பில் மீளாய்வு செய்ய சுகாதார அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட தொழிநுட்ப குழுவினருடன் இடம்பெறவுள்ள இன்றைய சந்திப்பின்போது தீர்மானமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்போது, சமூக இடைவெளியை ஒரு மீட்டராக பேணுவதா அல்லது இரண்டு மீட்டராக அதிகரிப்பதா என்பது குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: