ஹட்டனில் தனியார் வங்கி முகாமையாளருக்கு கொரோனா தொற்று - தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது

க.கிஷாந்தன்


ஹட்டன் நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு இன்று (03.11.2020) காலை தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.  இதற்கான நடவடிக்கை ஹட்டன் – டிக்கோயா நகரசபையால் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தனியார் வங்கியின் முகாமையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

குறித்த வங்கியின் முகாமையாளருக்கு கடந்த வாரம் தனது கொழும்பில் உள்ள அவரது வீட்டில் அவருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, குறித்த வங்கியில் பணியாற்றிய ஹட்டன், நோர்வூட், கம்பளை பகுதியை சேர்நதவர்கள் அவர்களின் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்பொழுது மேற்படி வங்கி மூடப்பட்டுள்ளது.

அதன்பின்னர் ஹட்டன் நகரிலுள்ள சகல வீதிகளிலும், பஸ் தரிப்பிடம் உள்ளிட்ட பொது இடங்களிலும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு, தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

No comments: