மினுவாங்கொடை கொரோனா கொத்தணி குறித்து சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை


மினுவாங்கொடை கொரோனா கொத்தணி குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் அறிக்கையிடுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபருக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை கொரோனா கொத்தணி உருவான விதம் குறித்து விசாரிக்குமாறு சட்டமா அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அது தொடர்பிலான விசாரணைகள் இதுவரை ஆரம்பிக்கப்படாமை குறித்து சட்டமா அதிபரினால் விளக்கம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: