மட்டக்களப்பில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொற்று நீக்கி வீசும் நடவடிக்கையில் பொலிசார்

கனகராசா சரவணன்


மட்டக்களப்பு நகர்பகுதில் கொரோனா தொற்றாளர்கள் 5 பேர் கண்டிபிடிக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிசார் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகள் வீதிகளில் தொற்று நீக்கி வீசும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை (07) காலையில் முன்னெடுத்தனர். 

லொயிட்ஜ் அவனியூர் வீதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3  கொரோனா தொற்று கண்டயியப்பட்ட அவர்களின் வீடு மற்றும் அருகிலுள்ள வீடுகள் வீதிகள் ஒழுங்கைகள் உட்பட்ட பகுதிகளில் பொலிஸ் தண்ணீர்  வீசும் வாகனத்தின் மூலம்  தொற்று நீக்கி வீசும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டனர்.

 

No comments: