ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முடிக்கப்பட வேண்டும் - இராணுவத் தளபதி


ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் சோதனைகள் முடிக்கப்பட வேண்டுமென இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தகவல்படி மொத்தமாக 10,655 பிசிஆர் பரிசோதனைகள் நேற்று இலங்கையில் நடத்தப்பட்டுள்ளன.

இதுவரை கொவிட்- 19 பாதிப்புற்ற 545,043 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தில் கூறுகையில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் படி இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பி.சி.ஆர் பரிசோதனைகளை நிறைவு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments: