ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி


கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்புடையவர்களை விரைவாக அடையாளப்படுத்தி, அவர்களை தனிமைப்படுத்துவதன் ஊடாக, முறையான பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றைக்கட்டுப்படுத்தும் செயற்திட்டங்கள் குறித்து கலந்துரையாடும் போதே, ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு ஊரடங்கு அமுலில் இருக்கும் போதே முறையான பொறிமுறையை உருவாக்கி அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

தற்போது முடக்கநிலை உள்ளபோது அதனை முறைப்படுத்துவது இலகுவாகும். சுயதனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட வீடுகள் நபர்களை அடையாளப்படுத்தி கொண்டால் ஊரடங்கை நீக்குவதில் பிரச்சினை ஏற்படாது. ஆகவே அதனை இந்த ஊரடங்கு காலப்பகுதியிலேயே உறுதிப்படுத்திகொள்ள வேண்டும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: