நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்


நாட்டில்  நேற்றைய தினத்தில் 397 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 41 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் என்பதுடன் ஏனைய 356 பேரும் பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7586ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, நாட்டில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11060ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 4905 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும்  6135 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: