பெரிய நீலாவணையில் சௌபாக்கியா வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு

செ.துஜியந்தன் 


ஜனாதிபதியின் சௌபாக்கியா விசேட வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு வீடு எனும் திட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியநீலாவணைக் கிராமத்தில் சமூர்த்திப் பயனாளி ஒருவருக்கு 10 இலட்சம் ரூபா செலவில் அமையவுள்ள வீட்டிற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு  பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.சந்திரகுமார் தலைமையில் இன்று(06)  நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் வழிகாட்டலில் சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் இதயராஜா ஒழுங்கமைப்பில் நடைபெற்ற நிகழ்வில் கிரம சேவகர் வி.கேதீஸ்வரன், சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.சுதாகரன், சமுர்த்தி வலய உதவியாளர் ரி.விஜிதா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.தர்மலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிக்கு அரசினால் ஆறு இலட்சம் ரூபா நிதி வழங்கப்படவுள்ளதுடன். மிகுதி நான்கு இலட்சம் ரூபா பயனாளியின் பங்களிப்புடன் 10 இலட்சம் செலவில் இவ்வீடு நிர்மாணிக்கப்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: