மருதபாண்டி ராமேஷ்வரன் பங்குபற்றலில் கொரோனாவை ஒழிக்க வேண்டி கொட்டக்கலையில் விசேட பூஜை

நீலமேகம் பிரசாந்த்


இலங்கையில் கொரோனாவை ஒழிக்க பிரதமரின் விசேட வேண்டுகோளில் ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவரிசையில் கொட்டக்கலை ஆலயத்திலும் இன்று 23 மூலிகைகள் கொண்ட விசேட யாகபூஜை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளில்  ஆலயகுருக்கள்  சிவஸ்ரீ ஸ்கந்தராஜா குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் உட்பட கொட்டக்கலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் உபதலைவர் சுரேஸ் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.


No comments: