சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


சர்வதேச ரீதியில் நேற்றைய நாளில் மாத்திரம் 4 இலட்சத்து 84 ஆயிரத்து 509 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, அதிக அளவான கொரோனா தொற்றாளர்கள், இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 78 இலட்சத்து 39 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், சர்வதேச ரீதியில் நேற்றைய நாளில் மாத்திரம் 8 ஆயிரத்து 201 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதன் அடிப்படையில், சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்து 19 ஆயிரத்து 719 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 கோடியே 43 இலட்சத்து 46 ஆயிரத்து 292 ஆக பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: