மஸ்கெலியா கங்கேவத்த தோட்டப்பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் கொரோனா

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மஸ்கெலியா கங்கேவத்த  தோட்டப்பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தைக்கும் மகனுக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

குறித்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கொழும்பு பேலியாகொட மீன் சந்தையில் தொழிபுரிந்து விட்டு மஸ்கெலியா புரோன்லோ தோட்டப்பகுதியில் உள்ள வீட்டிற்கு வந்திருந்த வேளை குறித்த நபருக்கு பி. சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, குடும்பத்தில் உள்ள பத்து பேரும் தனிமைபடுத்தபட்டனர்.

இன்றைய தினம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட குடும்பத்தின் உறவினர் வீட்டில் கருமகாரிய நிகழ்வு ஒன்று கடந்த 19ம் திகதி இடம்பெற்றதாகவும்,கருமகாரிய வீட்டிற்கு சென்று வந்த 15 குடும்பங்களை மஸ்கெலியா பொதுசாகாதார பரிசோதகர்களினால்  14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.

இதேவேளை அதே குடும்பத்தை சேர்ந்த 45 வயதுடைய தந்தை மற்றும் 10 வயதுடைய மகன் ஆகிய இருவருக்கும் 01.11.2020.ஞாயிற்றுகிழமை கொரோனா தொற்றுறுதி செய்யபட்டது. 

இவரகள் இரண்டு பேரும் ஹம்பாந்தோட்ட தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட இருவரும் வீடுகளில் தனி தனி அறையில் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன்,இது வரையில் மஸ்கெலியா கங்கேவத்த தோட்டப்பகுதியில் மாத்திரம் மொத்தம் ஜந்து பேர் கொரோனா தொற்றாளர்கள் இனங்கணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

No comments: