22வது கொரோனா மரணம் பதிவு


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக பதிவாகியுள்ளது.

கொட்டாஞ்சேனை - ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த  68 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மரண பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுளள் நிலையில் அந்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 1ம் திகதி இந்தப் பெண் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நிமோனியாவினால் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணத்துடன் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

No comments: