சுயதனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பொகவந்தலாவ, கொட்டியாகலை கிராமத்தில் 
சுயதனிமைப்படுத்தபட்ட குடும்பங்களுக்கு திகா, உதயா.சிவாவின் நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. 

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  பழனி திகாம்பரம் அவர்களின் ஆலோசனைகேற்ப பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  உதயகுமார் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவரும் நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினருமான பா.சிவநேசன் ஆகியோரின் சொந்த பணத்தில் 22 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

இதன் போது நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப செயலாளருமான கல்யாணகுமார், செயலாளர் செல்வராஜ் ,காரியாலய உத்தியோகத்தினர் ராஜா,கிராம சேவகர் ,சுகாதார ஆலோசகர் மதி மற்றும் வட்டார அமைப்பாளர் சார்ல்ஸ் என பலரும் கலந்துகொண்டனர். No comments: