கொரோனா தொற்றாளரின் கடையிலிருந்த பழுதடைந்த மீன்கள் அழிக்கப்பட்டன

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


கொரோனா தொற்றாளராக அடையாளம்  காணப்பட்ட மீன் விற்பனையாளரின் மீன் கடையிலிருந்த மீன்களை  அகற்றி அழிக்கப்பபட்டன. 

கடந்த 25 ஆம் திகதி ஹட்டன் சந்தைப் பகுதியில் மீன் விற்பனை நிலையமொன்றை நடத்தி வந்த மீன் விற்பனையாளர்   ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் அம்பாறை தனிமைபடுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந் நிலையில், தொற்று அபாயம் காரணமாக மூடப்பட்ட குறித்த மீன் கடையில் இருந்த மீன்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீசத்தொடங்கிய நிலையில்  02/11 இரவு ஹட்டன் பொது சுகாதார பரிசோதகர்களும் அட்டன் டிக்கோயா நகரசபை ஊழியர்களும் சுகாதார முறைமையோடு மீன்களை அகற்றி அழிக்கும் நடவடிக்கையில்  ஈடுபட்டனர் .

குறித்த சந்தை  பகுதி கடந்த 25 ஆம் திகதி முதல் சுயதனிமை பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: