நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்


நேற்று முன்தினம் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 27 வயதுடைய நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகவில்லை என உறுதியாகியுள்ளது.

அதன்படி இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 என தொற்று நோயியல் பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்ததுது.

தற்போது குறித்த மரணமானது கொரோனா தொற்றினால் ஏற்படவில்லை என்பது உறுதியான நிலையில்,இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: