ஹட்டனில் தந்தைக்கும் மகனுக்கும் கொரோனா

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


ஹட்டன் தும்புருகிரிய பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஹட்டன் டிக்கோயா சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

இவர்களுக்கான தொற்று 06.11.2020.வெள்ளிக்கிழமை மாலை வெளிவந்த பி. சி. ஆர் அறிக்கையின் ஊடாக உறுதி செய்யபட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

கடந்த 23ம் திகதி ஹட்டன் சந்தைக்கு பொருட்கள் கொள்வனவு செய்ய சென்றிருந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும் தொற்று காணப்படும் என்ற சந்தேகத்தில் குறித்த குடும்பம் சுயதனிமைப்படுத்தபட்டிருந்த போது பி. சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டது.

இதன் போது நேற்றைய தினம் பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யபட்டது. 

அதனை தொடர்ந்து இன்று மாலை குறித்த குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும் மகனுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த இரண்டு பேரையும் தனிமைபடுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையினை ஹட்டன் டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.No comments: