ஹட்டனில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி


ஹட்டனில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார். 

ஹட்டன் , தும்புருகிரிய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு மேற்கொண்ட பி.சி. ஆர் பரிசோதனையிலே கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது .

கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவராக முன்வந்து ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இந் நிலையில் கடந்த 02 ஆம் திகதி குறித்த பெண்ணுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு  04/11 /2020 கிடைக்கப்பெற்ற மருத்துவ அறிக்கையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.   

No comments: