தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பிய ஒருவர் உயிரிழப்பு


தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பிய புத்தளம் – நிந்தனிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனை கண்ணுற்ற பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த நபர் பணிபுரிந்த ஹெட்டிபொல பகுதியிலுள்ள ஹோட்டலுக்கு கொரோனா நோயாளர் ஒருவர் வருகை தந்ததை தொடர்ந்து அவர் 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

மேலும் உயிரிழந்தவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளாரா என்பது தொடர்பில் பரிசோதனை செய்வதற்காக அவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: