ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் பிரதேச செயலகத்தால் வழங்கி வைப்பு

வி.சுகிர்தகுமார் 


கொரோனா தொற்றுடையவர்களுடன் சம்மந்தப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் வீடுகளில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான உலர் உணவுப்  பொதியினை அரசாங்கம் வழங்கி வருகின்றது.

இவ்வாறு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் சுய தனிமைக்குட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் பிரதேச செயலகத்தால் வழங்கி வைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் அன்மையில் கொரோனா தொற்றுடையவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

அவர் பயணம் செய்த பஸ்சில் பயணித்த ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்தவர்களும் வெளியிடங்களில் இருந்து ஆலையடிவேம்பு பிரதேசத்தி;ற்கு வருகை தந்தவர்களுமே  இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களை சுகாதார துறையினர் கண்காணித்து வருவதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

இவ்வாறு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 11 குடும்பத்தினை சேர்ந்த 50 பேர் வீடுகளில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்

இதேநேரம் நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் வாழும் மக்கள் அலட்சியம் செய்யாமல் முகக்கவசம் அணிவதுடன் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறும் சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் பிரதேச சபை பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்டவர்கள் மக்களுக்கான அறிவுறுத்தல் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: