நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பற்றிய விபரம்


நாட்டில் நேற்றைய தினம் மேலும் 400 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 12970 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, தவுலபிட்டி – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9492 ஆக உயர்ந்துள்ளது என்று தொற்றுநோயில் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5755 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7186 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: