சவூதி அரேபியாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை


கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக சவூதி அரேபியாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்க்பட்டுள்ளது.

இதன்படி, 150 பாதுகாப்பு இடங்களில் தங்கவைக்க்பட்டுள்ள இலங்கையர்களை அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்துவர இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கொன சிறப்பு விமானங்கள் இரண்டினை சவுதியரேபியாவுக்கு அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

இதேவேளை, முப்படையினரால் நடாத்திசெல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பெரும்பாலானவர்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரும் இலங்கையர்களை தங்கவைக்க போதிய இடவசதிகள் கிடைக்கும் எனவும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டியுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: