சஹ்ரான் ஹஸிமின் மனைவிக்கு கொரோனா தொற்று


கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான முகமது சஹ்ரான் ஹஸிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலநறுவை மாவட்டத்தில் உள்ள வெலிகந்தை மருத்துவமனைக்கு இன்று அதிரடிப்படையினரால் அவர் கடும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.No comments: