சுயதனிக்குற்படுத்தப்பட்ட வனராஜா வட்டார கேம்வெளி மக்கள் தொடர்பில் நோர்வூட் பிரதேச சபை கவனம் செலுத்த வேண்டும்

பொகவந்தலா நிருபர்.சதீஸ்


சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள வனராஜா, கேம்வெளி மக்கள் தொடர்பில் நோர்ட்வூட் பிரதேச சபை கவனம் செலுத்த வேண்டும்.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள வனராஜா வட்டார  பகுதி மக்கள் தொடர்பில் நோர்வூட் பிரதேச சபை கவனம் செலுத்த வேண்டும் என  நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மு.ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஹட்டன் நகரில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த தொற்று ஏற்பட்ட உறவுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் பலர் சுயதனிமைக்குட்படுத்தப்பட்டனர். 

அந்தவகையில், ஹட்டன்  நகரையொட்டிய நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட கேம்வெளி பகுதியைச் சேர்ந்த 30 குடும்பங்கள் கடந்த 25 ஆம் திகதி முதல் தமது வீடுகளில் சுயதனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். மேற்படி, 30 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் வரையில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

ஆரம்பத்தில் ஹட்டன் நகரசபைக்குட்பட்ட எல்லைக்குள் இருந்து மேற்படி கேம்வெளி பிரதேசம் எல்லை நிர்ணயத்தின் பின்னர் நோர்வூட் பிரதேச சபை பகுதிக்கு உட்பட்ட பிரதேசமாக நிர்ணயிகக்கப்பட்டது. 

இவ்வாறிருக்கின்ற நிலையில் நோர்வூட் பிரதேச சபை, அம்மக்கள் தொடர்பில் எவ்வித கரிசனையும் காட்டவில்லை என பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் முறையிடுகின்றனர். 

குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மாத்திரம் நோர்வூட் பிரதேச சபை குறியாக வைத்து தனது சேவையை  மேற்கொள்ளாது நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட சமர்வில் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகள் ,வனராஜா பகுதிக்குட்பட்ட பகுதிகள் உட்பட பிரதேசசபைக்குட்பட்ட சகல பகுதிகளுக்கும் சரிசமமான சேவையை முன்னெடுக்க நோர்வூட் பிரதேசபைத் தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

அத்துடன், நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட 12 வட்டாரப்பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள   சுய தனிமைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். 

அவர்களுக்கான நிவாரணத்தை அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன்  வனராஜா கேம்வெளி,சமர்வில் காசல்ரி  பகுதிக்கு பிரதேசசபையூடாக கிருமி நாசினிகளை தெளிப்பதற்கும் அவர்களுக்கான நிவாரண உதவிகளை  வழங்குவதற்கும் பிரதேச சபைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 No comments: